Header Ads



எங்களின் வெற்றி உறுதி - ஜனாதிபதியும், JVP யும் வதந்திகளை பரப்புகிறார்கள் - சஜித்


நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளதாகவும், அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவரும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


“மக்கள் விடுதலை முன்னணியும், ஜனாதிபதியும் இணைந்து, எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நேரத்தில், பொய்யான வதந்திகளை பரப்பி, ஃபேஸ்புக் மற்றும் பல்வேறு இணையதளங்களில், பணத்தினை வழங்கி நாங்கள் ஒன்றாக சேர்கிறோம் என போலி பிரசாரம் செய்கின்றனர்.


ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதி இந்நாட்டின் 220 இலட்சம் பொது மக்களுடன் இணைவோம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்.


இந்த நலிந்த மற்றும் மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளிடம் நாங்கள் செல்ல மாட்டோம்.


தலைவனும், திசைகாட்டி தலைவனும் ஒன்று சேர பெரும் ஆசை.


அவர்கள் விரும்பினால் சேரலாம். எக்காரணம் கொண்டும் நாட்டை சீரழிக்கும் கும்பலுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது" என்றார்.

No comments

Powered by Blogger.