Header Ads



புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா..? 7 பேர் கொண்ட குழு நியமனம்


வினாத்தாள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்துவதா, இல்லையா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக 7 பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.


இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமையினால் பதற்றமான சூழ்நிலை உருவானதுடன், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.


மேற்படி, விசாரணைகளை கருத்தில் கொண்டு மீண்டும் பரீட்சை நடத்தப்படுமா, இல்லையா? என்பது தொடர்பில் குறித்த குழுவால் தீர்மானம் மேற்கொள்ளபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.