ரணில் வெற்றி பெறுவார், இல்லாவிடின் 6 மாதங்களின் பின் ஜனாதிபதியாவார் - அலி சப்ரி
சிலாபத்தில் இன்று (01) பிற்பகல் இடம்பெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உரையாற்றும் போது தெரிவித்தவை,
ஜனாதிபதியின் வெற்றி மக்களின் மனங்களில் உள்ள நன்றிக் கடனின் ஊடாகவே முடிவாகிறது. ஒப்பந்தங்களினாலோ டீல்களினாலோ அது முடிவாகாது. செப்டம்பர் 21 ஆம் திகதி தேர்தலில் ஜனாதிபதி வெற்றி பெறுவார். இல்லாவிடின் 6 மாதங்களின் பின்னர் ஜனாதிபதியாவார்.
வேறொருவர் வென்றாலும் நாடு வீழ்ச்சியடைந்து அவருக்கு ஆட்சியை ஏற்க நேரிடும். பங்களாதேஷின் வெளிநாடுகளுடான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.ஏற்றுமதிப் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது. அத்தகைய நிலை எமக்கும் ஏற்பட வேண்டுமா?
நாம் அடைந்த முன்னேற்றத்தை தொடர வேண்டும்.2010 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிக் கடன் செலுத்தியது போன்று எமது மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நன்றிக் கடன் செலுத்துவது உறுதி" என்றார்.
ஊடகப் பிரிவு
01-09-2024
Post a Comment