Header Ads



காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் - 5 நிறுவனங்களுக்கு முக்கிய தொடர்பு



கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான அரச வாகனங்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன  தெரிவித்தார்.


புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததையடுத்து, முன்னாள் அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பயன்படுத்திய பல உத்தியோகபூர்வ வாகனங்கள் அண்மையில் காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்தன.


இந்தப் பின்னணியில், சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 comment:

  1. நிச்சியம் இதன் இரகசியங்கள் நேரடியாகத் தெரிந்து வைத்திருக்கும் சாதாரண தர அதிகாரிகள் தான் Transport supervisors. குறித்த அரச நிறுவனங்களில் உள்ள மேற்படி அதிகாரிகளை உளவுப்பிரிவு நீதிமன்ற அனுமதியுடன் அவர்களைச் சிறையில் அடைத்தால் அத்தனை உண்மைகளும் வௌிவரும். அதுதவிர தொடர்பான நிறுவனங்களில் ஆய்வு செய்து பணம், நேர காலங்களை வீணடிப்பதில் பயனில்லை. இவர்களை கைது செய்து கொஞ்சப் பேரை சிறையில் அடைத்தால் அரச கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியை விற்க டட்லி சிரிசேன உடன்பட்டது போல எல்லா இரகசியங்களும் வௌிவரும்.

    ReplyDelete

Powered by Blogger.