Header Ads



உணவு ஒவ்வாமையினால் 500 பேர் பாதிப்பு


பொலன்னறுவை, பகமூன பிரதேசத்தில் உள்ள பிரதான தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று (19) காலை உணவு ஒவ்வாமை காரணமாக மிகவும் சுகவீனமடைந்த பகமூனை மற்றும் அத்தனகடலை கிராமிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.


நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பஸ்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் மூலம் பக்கமூன பிராந்திய வைத்தியசாலை மற்றும் அத்தனகடவல கிராமிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பகமூன பிரதேச வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக அதிகளவானோர் பஸ்கள் மற்றும் அம்பியூலன்ஸ்கள் மூலம் அத்தனகடவல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


அத்தனகடவல மற்றும் பகமூன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் மற்றும் பணிப்பெண்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் பக்கமூன மற்றும் அத்தனகடவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.