பரீட்சை திணைக்களம் அருகே பரபரப்பு, 3 வினாக்களை ரத்துச் செய்வதால் பெற்றோர் ஆத்திரம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சை திணைக்களத்துக்கு முன்பாக பெற்றோர் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது, எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்சிலர், பரீட்சை திணைக்களத்துக்கு சென்று கடிதம் ஒன்றை வழங்கி உள்ளனர்.
பெற்றோர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தியதால், பொலிஸாரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment