3 பேர் தவிர, 35 வேட்பாளர்களும் கட்டுப்பணம் இழந்தனர்
இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாகத் தெரிவான அனுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment