வரலாற்றில் முதன்முறை - சஜித், அநுர தவிர சகலரும் போட்டியிலிருந்து நீக்கம் - 2 வது விருப்பு வாக்கு எண்ணுவது ஆரம்பம்
2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, பிரதான இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, போட்டியில் இருந்து நீக்கப்படும் வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டாவது விருப்பு வாக்குகளுக்கு அமைய புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் இரண்டாவது விருப்பு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Post a Comment