Header Ads



20 மில்லியன் லஞ்சம் கோரிய அதிகாரிகள் - அம்பலப்படுத்தும் வசந்த சமரசிங்க


சில மதுபானசாலை அனுமதிகளை வழங்குவதற்காக ஊழல்மிக்க கலால் திணைக்கள அதிகாரிகள் சிலர் அண்மையில் 20 மில்லியன் ரூபாய் வரை கோரியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர் நேற்று தெரிவித்தார்.


இவ்வாறாக அனுமதி வழங்கப்பட்ட மதுபானசாலைகளின் தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும் மற்றும் குறித்த ஊழல் மோசடிகள் தொடர்பான குரல் பதிவுகள் தங்களிடம் உள்ளதாகவும் NPP நிர்வாக சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க கூறினார்.


ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சமரசிங்க, லஞ்சம் கொடுக்க மறுத்தவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கே குறித்த அதிகாரிகள் மறுத்துள்ளனர்.


"இந்த ஊழல் பேரங்கள் காரணமாக அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த கலால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்" என்று சமரசிங்க கூறினார்.


இதேவேளை, மதுபான போத்தலில் போலி பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டி மோசடியில் ஈடுபட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட வார இறுதியில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


அவர்கள் தொடர்பில் ஜனாதிபதி, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.