Header Ads



நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு கைது செய்யப்படுவீர்கள்


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில், குறித்த காலக்கெடுவிற்குப் பின்னர் சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.


டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, “குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பின்னரும் எந்தவொரு தனிநபரோ அல்லது குழுவோ வேட்பாளர்களை பிரச்சாரம் செய்வது அல்லது ஊக்குவிப்பது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும்” என்றார்.


ரத்நாயக்கவின் கூற்றுப்படி, நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.


“பிரச்சாரக் காலம் முடிவடைந்தவுடன், பொதுப் பேரணிகள், விளம்பரப் பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது அனுமதிக்கப்படாது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க பொலிஸிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, ”என்று அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.