Header Ads



இலங்கையைச் சுற்ற ஆரம்பித்துள்ள 11 வயது சிறுவன்


கிளிநொச்சி  கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய குறித்த மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை இன்று (25) ஆரம்பித்துள்ளார்.


புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடையாத நிலையில், சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.


இன்று -25- காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் ஆரம்பித்த பயணம் முல்லைத்தீவு நோக்கி ஆரம்பமானது.


குறித்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களுமாக இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.


குறித்த சிறுவனுடன் அவரது தந்தையும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.