Header Ads



பணம் ஒதுக்கப்படவில்லை, 11 பில்லியன் தேவை - எப்படி தேர்தலை நடத்துவது..?


பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்காக 11 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேநேரம் அரசியலமைப்பின்படி, பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு திறைசேரியில் இருந்து ஜனாதிபதியினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 


பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனினும் ஜனாதிபதியின் நிறைவேற்று  அதிகாரத்துக்கு இணங்க பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதியின் செயலாளரின் ஊடாக வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வேட்பு மனுத் திகதி தேர்தல் திகதி மேலும் பாராளுமன்ற கூடுகிறது ஆகவே அறிவிக்கப்பட்டால் அதன் மூலம் திரைசேரியில் இருந்து நிதி ஒதுக்கி கொள்ளமுடியும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க  தெரிவித்தார்.....


மேலே கூறப்பட்ட விடயங்கள் சட்டரீதியாக இடம் பெற்று உள்ளதால் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் தினம் அவர் தெரிவித்தார்


No comments

Powered by Blogger.