டீசலை 100 ரூபாய்க்கு, வழங்குமாறு சவால்
தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தனர்.
அதன்படி, லிட்டருக்கு 150 ரூபாய் குறைக்கவேண்டும். தற்போதைய சட்ட விதிகளுக்கமைய, 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும்.
எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்க்காக, முன்னாள் அமைச்சர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார விலை திருத்தம் ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தாமதமின்றி, அதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்திடம், தாம், கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முடிந்த அத்தனை கொள்ளை, களவு,கமிசன்,சட்டவிரோத அரச நிதிளைக் களவாகச் சேர்ந்து கோடான கோடி டொலர்களை கொள்ளையடித்து விட்டு புதிய அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் செய்வது சாத்தியமில்லாத பணிகளை அரசாங்கத்துக்கு சவாலாக கூறிக் கொண்டு அரசாங்கத்துக்கு உதவுவது போல நடிக்கின்றான் இந்தக் கள்ள மூதேவி. உ.தா. 100ரூபாவுக்கு பெற்றோலை முடிந்தால் கொடுங்கள். இது பொதுமக்களுக்கு சார்பானது போல் இருந்தாலும் புதிய அரசாங்கத்தால் ரூபா 135 க்கு பெற்றோலை வாங்கி ரூபா 100 க்கு எந்தவகையிலும் விற்க முடியாது. எனவே இவனுடைய திருகுதாளங்களை உடனடியாக கண்டுபிடித்து ஸிஐடி மூலம் இவனை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறைக்கு அனுப்ப அரசு முயற்சி செய்ய வேண்டும். இவனுடைய சவாலுக்கு இதுதான் பதிலாக அரசாங்கம் கொடுக்க வேண்டும். பெற்றோல் வாங்கும் போது எவ்வளவு கமிசன் அடித்தான் என்பதைச் சரியாக கண்டுபிடித்தால் அது மாத்திரம் போதும் இவனுக்கு உரிய தண்டனை வழங்க.அதில் அரசு தற்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
ReplyDelete