Header Ads



சஜித் பிரேமதாசா ஆட்சியமைத்ததும் VFS மோசடி குறித்தே முதலில் விசாரணை


ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய(11) ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்துக்கள்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்றைய தினமும் கண்டியில் வைத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன். நான் தான் தற்போது  தொழில் அமைச்சர் கூறி மீண்டும் தோட்ட மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 


VFS கொடுக்கல் வாங்கல் மோசடியை அமைச்சர் டிரான் அலஸ் சுத்தப்படுத்த முயற்சிக்கிறார்.  செப்டம்பர் 21 சஜித் பிரேமதாசவின் வெற்றியை தொடர்ந்து முதலாவது நாம் இந்த VFS கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்தே விசாரணை நடத்துவோம்.


ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ, அநுர குமார என சகலரினதும் ஒரே இலக்கு சஜித் பிரேமதாசவே. சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும். அதன் ஒரு பகுதியாகவே ரணில் விக்ரமசிங்கவின் ஒப்பந்தம் ஒன்றின் பிரகாரமே சரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.

No comments

Powered by Blogger.