ஜயம்பதி விக்ரமரத்ன SJB யில் இணைந்து கொண்டார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இவர், அரசியலமைப்பு சார் சட்டத்தரணியாக நாட்டிலும் சர்வதேசத்திலும் நன்கறியப்பட்ட ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.
சந்தர்ப்பவாத அரசியல்வாதியும் சட்டத்தரணியும் இந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கும் நாட்டின் சுபீட்சத்துக்கும் என்ன பங்காற்றலாம் என்பதை இவரைச் சேர்த்துக் கொள்ள முன்பு நன்கு பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
ReplyDelete