Header Ads



ஈரானிய ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்காத OIC, கொடூர தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என்கிறது


ஈரானிய மற்றும் பாலத்தீனிய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) புதன்கிழமை செளதி அரேபியவில் கூடியது.


இந்த கூட்டத்தில், இரானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் பக்யூரி அலி பாகேரி கனி ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்கு ஈரான் கொடுக்கப் போகும் பதிலடியை அமைப்பு ஆதரிக்கும் எதிர்பார்ப்பதாக கூறினார்.


"ஈரானின் நடவடிக்கை அதன் சொந்த இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான அறன் மட்டுமல்ல, முழு பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கான அறன் " என்று அவர் கூறினார்.


பின்னர் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில், 


"கொடூரமான தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் முழு பொறுப்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஈரானின் இறையாண்மை மீதான "தீவிரமான தாக்குதல்" என்று விவரித்தது.


அதே சமயம் ரானிய ராணுவ நடவடிக்கைக்கு இந்த அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை.


  BBC

No comments

Powered by Blogger.