NPP யின் தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்கு தீ
மீரிகம பொகலகம பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார அலுவலகம் இன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த கட்டிடமும் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ வைத்த நபர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பல்லேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment