நாமல் ஜனாதிபதியானால், ஜோன்ஸ்டன் பிரதமர் - சஜித்திற்கே அதிக ஆதரவு உள்ளது
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமக்கு கிடைத்த தரவுகளின் படி, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே அதிக ஆதரவு உள்ளது. முன்னிலையில் அவரே இருக்கின்றார். சஜித் பிரேமதாசவிடம் சிறந்த அணியினர் உள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அவரிடம் பொருளாதார நோக்கம் என்பது கிடையாது. அத்தோடு, போராட்டக்காலங்களில் ஆட்களை திரட்டி பயமுறுத்தும் வகையில் செயற்பட்டவர் அனுர.
இதேவேளை, பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பக்கம் சென்ற பொதுஜன பெரமுனவின் மைந்தர்கள் அனைவரும் மீண்டும் பொதுஜன பெரமுனவுக்குத் திரும்பி வருவார்கள். அதை நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு ரணில் பக்கம் சென்ற உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அத்தோடு, நாமல் ராஜபக்சவின் ஆட்சி அமைந்தால், அதில் பிரதமர் பதவி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கே வழங்கப்படும் என்பதுடன், மற்றுமொரு தேர்தலுக்கு முகம்கொடுக்க நேரிட்டால் அதில் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து சஷீந்திர ராஜபக்ச களமிறக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment