Header Ads



பிரான்சின் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்


பிரான்சின் பழமை வாய்ந்த இலங்கை முஸ்லிம்களின் விளையாட்டு கழகமான ALL BLACKS CRICKET கழகத்தினால் 25/08/2024 அன்று மிக விமர்சியாகவும் சிறப்பாகவும் நடந்து முடிந்த Grand European Cricket Tounament 2024 போட்டித் தொடரில்  சுவிஸ் 🇨🇭( Ceylon Moors CC ), இத்தாலி 🇮🇹 ( Moors SC ), மற்றும் பிரான்ஸ் 🇫🇷 ( All Blacks CC ) விளையாட்டு கழகத்தினர் பங்கேற்றிருந்தனர். 


விறுவிறுப்பாக நடந்த போட்டிகளில் இறுதியில் CHAMPIONS கிண்ணத்தை  பிரான்ஸின் ALL BALCKS CC A அணியினர் கைப்பற்றியதோடு RUNNER UP கிண்ணத்தை சுவிஸின் Ceylon Moors CC விளையாட்டுக் கழகத்தினர் பெற்றுக் கொண்டார்கள். 


மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ALL BLACKS B மட்றும் இத்தாலியின் Moors SC அணியினரும் போட்டியிட்டு All Blacks B வெற்றி பெற்ற போதும் மூன்றாவது இடத்தை சகோதரத்துவத்துடன் பகிர்ந்து கொண்ட தருணம் போட்டியின் மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வாக  அமைந்திருந்தது அல்லாஹு அக்பர்!


இப் போட்டியில் கிண்ணம் வென்ற வீரர்கள் : 

- Man of the Match - Zanhar ( All Blacks CC )

- Best Batsman - Zanhar

- Man of the Series - Zanhar

- Best Bowler - Shaheem ( Ceylon Moors CC ) 

- Best Fielder - Shaan ( ABCC )  

- Most Sixes - Zanhar

- Stylish Player of the Tournament - Jiffry ( ABCC )

- Most Improved Player of the Tournament - Mushtaq ( ABCC )

- Star Player of the Tournament - Abdullah ( ABCC )


அத்துடன் இப் போட்டிக்கான அனுசரணை வழங்கிய Restaurant 2020, ElegantPick, Naana Pizza Lanka, Excellence Education மற்றும் Numan Catering Services அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.


அத்தோடு பார்வையாளர்களாக வந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 


வெற்றி தோல்வி என்பது நிரந்தரம் இல்லை.  அதேபோன்றுதான் வாழ்க்கையும். ஆகவே வாழும் வரை நாம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் வாழ வைத்து வாழ்ந்தோம் என்று வாழ வேண்டும் என்று சிந்தனையை உருவாக்கிய ALL BLACKS விளையாட்டு கழகத்தின் தலைவர், நிர்வாகத்தினர் மற்றும் வீரர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகின்றோம். 


பின்வரும் காலங்களில் இம்முயற்சிபோல் ஒற்றுமையாகவும் சமத்துவமாகவும் செயற்பட்டு நடக்க அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக ஆமீன்.


‏جزاك الله خيرا





No comments

Powered by Blogger.