சர்வதேச மஸ்ஜித் தினம் - அல்-அக்ஸா பள்ளிக்கு தீ வைத்த இஸ்ரேலியன்
இஸ்லாத்தில் மஸ்ஜித் நிறுவப்பட்டதன் முக்கியத்துவம்
மஸ்ஜித் இஸ்லாத்தில் மிக முக்கியமான ஒரு புனித தலமாகும். குர்ஆனில் 'மஸ்ஜித்' என்ற சொல் 28 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 22 முறை ஒருமையிலும், 6 முறை பன்மையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பத்தில் அது மஸ்ஜிதுல் அக்ஸாவையும், மஸ்ஜிதுல் ஹராமையும், நயவஞ்சகர்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ழிராரையும் சுட்டிக்காட்டுகின்றது. எனிலும் சில நேரங்களில் அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கி பொதுப்படையாகவும் சுட்டுக்காட்டுகுpறது. எனவே இஸ்லாம் பள்ளிகளுக்கும் வணக்கஸ்தலங்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வளங்கியுள்ளது என்பதை இவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தின் பார்வையின் மஸ்ஜித்கள் நிர்வப்பட்டதின் இலக்கு
பள்ளிகள் சமூக ஒற்றுமைக்காக (சூரத்து தௌபா: 108 – 109) செயற்படும் நிர்வனமாகவும், இறை பக்தியை மேம்படுத்துவதற்கான மற்றும் சுயசுத்திகரிப்புக்காள தலமாகவும் (சூரத்துல் ஜின் : 18 ), இறை அருளை பெறுவதற்கான தலமாகவும் (சூரத்து தௌபா), கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் மையமாகவும் (சூரத்துல் அஃராப்: 31), இறைவனுடனான தொடர்பை அதிகரிப்பதற்கான இடமாகவும் திகழ வேண்டும் என்பதே அவை நிர்வப்பட்டதற்கான இலக்குகளாகும்.
இதனால் தான் இஸ்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மஸ்ஜித்கள் தொடர்பான எமது பங்கைப்பற்றி எமக்கு எடுத்தியெம்புகிறது. சுருங்கக் கூறுவதாயின், யுத்தத்தின் பொது போராளிகள் வணக்கஸ்தளங்களோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாத்தின் கட்டளையை அறிந்தவர் இஸ்லாம் வணக்கஸ் தலங்களுக்கு கொடுக்கும் முக்கயத்துத்தை புரிந்து கொள்வார்.
ஹதீஸின் கண்ணோட்டத்தில் எமது பங்களிப்புக்கான நன்மாறயம்
யார் ஒருவர் பள்ளியை கட்டுவதற்காக தனது பங்களிப்பை வழங்குகிறாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் ஒரு வீட்டைக்கட்டுகிறான்.
யார் பள்ளியில் ஒரு வெளிச்சத்தை ஒளிரச் செய்கிறாரோ, அவருக்காக மலக்குமார்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுகிறார்கள்.
பள்ளி கட்டுவதிலிருந்து அதை பராமரிக்கும் வரையான நன்மாறாயங்களை ஹதீஸ் கிரந்தங்களில் பலவலாக காணப்படுகிறது. மேலும் அந்த பள்ளிகளின் சட்ட திட்டங்கள் என்ன என்பதையும் நாம் பிக்ஹ் நூல்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, பள்ளியின் புனிதத்தை பேணும் நோக்கில், பள்ளிக்குள் நுழைவோர் உடலியல் ரீதியான தூய்மையுடைவராகவும் உள ரீதியான தூய எண்ணத்தோடும் இருக்க வேண்டும் என்று பிக்ஹ் வலியுறுத்துகிறது. இதனால் தான் தொழுகையின் நேரம் குறைவாக இருந்த போதிலும், பள்ளியில் அசுத்தத்தைக் கண்டால், அதை தூய்மைப்படுத்தலை முதன்மைப்படுத்த வேண்டும் என்ற பத்வாக்களையும் காணக்கூடியதாக இருக்கிறன.
மேலும் பள்ளிக்கான பொருட்களை வேறு இலக்குக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் பல அறிஞர்கள் பத்வா வழங்கியுள்ளார். இவற்றின் மூலம் பள்ளி தொடர்பான எமது கடமைகளினதும் பங்களிப்பினதும் பாரதூரத்தை அறிந்து கொள்ளலாம், மற்றும் தனி மனிதனாகவும் சமூகமாகவும் நாங்கள் அதற்கான பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் பள்ளி அனைத்து மக்களையும் ஒன்றினைத்து ஜக்கியமாக வழ பழக்குகிறது. இவற்றை ஜமாஅத்தாக தொழுவதின் நன்மையின் ஊடாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் இஸ்லாம் பள்ளிகளில் சமூக மற்றும் அரசியல் போன்ற செயற்பாடுகளை செய்வதற்கும் அனுமதிவழங்கியுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு செயற்பாடுகளின் உதயம் தூய்மையான மற்றும் தெய்வீக திருப்தி பெற்ற இடத்திலிருந்து இருக்குமாக இருந்தால், அதன் ஆயள் நீண்டதாக இருக்கும், அதன் தாக்கமும் மிக விரைவாகவும் இருக்கும்.
மேலும் வணக்கஸ்தலம் என்பது அப்பகுதியில் வாழும் மக்களின் மார்க்கத்தை எடுத்துரைக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகையால் அது அவர்களின் இருப்புக்கான அடையாளமாகவும் ஏனையவர்கள் அப்பகுதியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்பிக்க கூடிய இடமாகவும் காணப்படுகிறது. எனவே இனைத்து வணக்கஸ்தளங்களையும் எவ்வித பாகுபடின்றி கண்ணியப்படுத்துவது அனைவரின் மீதிருக்கும் கடமையாகும். இது முஸ்லிம்கள் தங்களின் மார்க்க கடமைகளை நிறைவேற்றும் பள்ளி வாயலும் விதிவிலக்குல்ல. ஆனால் மதச் சுதந்திரம் என்ற போலிப் போர்வையிலுள்ளவர்களும் மத நல்லிணக்கத்தை விரும்பாதவர்களும் தங்களின் சமயத்தின் மேன்மையையும் ஆதிகாரத்தையும் காட்ட நினைப்பவர்களும் தற்போது முக்கிய இஸ்லாமிய தலங்களை அவமதித்துக் கொண்டிருப்பதை காணலாம். இதனால் பள்ளியை கண்ணியப்படுத்துதல் என்பது இறைவனைக் கண்ணிப்படுத்தியதற்கு சமமாகும். அதை இழிவுபடுத்துதல் அல்லாஹ்வை இழிவுபடுத்தியதற்கு சமமாகும்.
எமது கடமை
சியோனிஸ்டகளினால் மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு செய்த அட்டூளியத்தை நினைவு கூறும் வகையில் தான் ஆகஸ்ட் 21 ஆம் திகதி சர்வதேச மஸ்ஜித் தினமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இத்தினத்தை ஒரு செய்தியாக பார்க்காமல், ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு அழைப்பாக ஏற்று, ஆக்கிரமிப்புக்கும் இரத்த காட்டேறிகளுக்கு எதிராக ஜக்கியப்பட்டு நீதிக்காக முயற்சிப்போம்.
முஹம்மது அஸாம் மஜீதி
Post a Comment