நாட்டை முன்னேற்ற என்னைவிட, அனுபவசாலி எவரும் கிடையாது - விஜயதாச
நாட்டை முன்னேற்ற என்னை விட அனுபவசாலி எவரும் கிடையாது என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
LS ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு மக்களிடமே உள்ளது என விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்தது தான் மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment