மாவனல்ல தேர்தல் மேடையில், இப்படியும் நிகழ்ந்தது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார மேடையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புகழ்ந்து பாராட்டிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜிகா விக்ரமசிங்க இவ்வாறு மகிந்தவை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
மாவனல்லயில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ நாட்டு மக்களின் துன்பத்தை போக்கிய, நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த தலைவர் மகிந்த ராஜபக்சவே” என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜிக தெரிவித்துள்ளார்.
ரணிலின் பிரசார மேடையில் மகிந்தவை புகழ்ந்துவிட்டோம் என புரிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜிகா உடனடியாக அந்த தவறை திருத்தி ரணிலின் பெயரைக் கூறியுள்ளார்.
பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ரஜிகா, ரணிலுடன் இணைந்து தேர்தலில் பிரசாரம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
its not surprised for us bcs its Pro-Ranil rajapakshe stage.....😂😂
ReplyDelete