ஈரான் ஜனாதிபதிக்கு, மன்னர் சல்மான் அனுப்பியுள்ள கடிதம்
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு எழுதிய கடிதத்தில், ரியாத் மற்றும் தெஹ்ரான் இடையேயான உறவுகளை வலுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளார்.
இச்செய்தியை சவுதி அரேபிய அமைச்சர் இளவரசர் மன்சூர் பின் மிதேப் பின் அப்துல்அஜிஸ் வியாழன் அன்று ஜனாதிபதி பெசெஷ்கியானிடம் வழங்கினார் என்று சவுதி செய்தி முகமையை (SPA) மேற்கோள்காட்டி IRNA தெரிவித்துள்ளது.
இளவரசர் மன்சூர் ஈரானிய மக்களுக்கு மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
ஈரானுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும், பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இரு தரப்புக்கும் இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனையைத் தொடர்வதில் மேலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு சவுதி மன்னர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெற்றி, கெளரவம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை மன்னர் சல்மான் வாழ்த்தினார்.
Post a Comment