Header Ads



பலர் தங்கள் தவறுகளை உணர்ந்து, மீள வருவார்கள் என உறுதியாக நம்புகின்றேன்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே உட்பட பலர் தொடர்பில் ஆராய்ந்தோம் என தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.


வேட்பாளர் போட்டியிலிருந்து தம்மிக பெரேரா விலகிய பின்னர் நாங்கள் பல பெயர்களை ஆராய்ந்தோம். பிரதமர் தினேஸ் குணவர்த்தன, எம்.பி காமினிலொகுகே கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் ஆகியோரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆராய்ந்தோம்.


கட்சியின் பிரதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக நாமல் ராஜபக்சவை நியமிக்க தீர்மானித்தோம்.


எங்களிடம் தகுதியான ஏனைய வேட்பாளர்கள் இருந்தனர் விஜயதாச ராஜபக்சவை கூட நாங்கள் ஆதரித்திருப்போம், அவர் வேறு கட்சியின் கீழ் போட்டியிட்டாலும் அவர் இன்னமும் நாடாளுமன்றத்தில் மொட்டுக் கட்சி உறுப்பினரே என பசில் தெரிவித்துள்ளார்.



தற்போதைக்கு நாங்கள் தேர்தல் தொடர்பில் கவனம் செலுத்துவோம் பலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மீள வருவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  

1 comment:

  1. அமெரிக்க பாஸ்ட்போர்ட்டை வைத்துக் கொண்டு இலங்கை மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து கோடீஸ்வரனாக மாறியுள்ள இந்த கள்ளனை யார் ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாகக் கைது செய்து 150 வருடம் சிறையில் அடைத்து இவன் களவாடிய அத்தனை பணம் சொத்துக்களையும் திருப்பி அரச திறைசேரிக்கு பெற்றுக் கொள்ள உறுதியான சட்டமும் செயல்பாடும் அவசியமாகும். நாடு முன்னேறுவதன் ஆரம்பப் படி இதுவாகும்.

    ReplyDelete

Powered by Blogger.