Header Ads



கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிப்பது குறித்து கவனம்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


தேசிய தேர்தல் ஆணைக்குழு இந்த விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த விடயம் தொடர்பில் இந்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.


தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


இந்த கருத்துக் கணிப்புக்கள் மூலம் சில வேட்பாளர்களுக்கு பாதக நிலைமை ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த கருத்தக் கணிப்புக்களை மேற்கொள்ளும் தரப்புக்கள் யார் என்பது குறித்து கண்டறியும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு ஆய்வு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த ஆய்வின் அடிப்படையில் கருத்துக் கணிப்புக்களை தடை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் நடத்டதப்படும் கருத்துக் கணிப்புக்களை ரத்து செய்வது இலகுவானது என்ற போதிலும், சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புக்களை கட்டுப்படுத்துவது சவால் மிக்கது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.