Header Ads



தவளைகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படும் - நாமல்


தேர்தல் காலத்தில் வரப்பிரசாதம் மற்றும் தனிப்பட்ட இலாபம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, தவளை போல் கட்சியை விட்டு பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


அத்துடன், கட்சி தாவல்களில் ஈடுபடுபவர்களுக்கு உயர்நீதிமன்றம் அண்மைக் காலமாக வழங்கிய தீர்ப்புக்களை வரவேற்கிறேன் எனவும் நாமல் கூறியுள்ளார்.


அரசியல்வாதிகள் எம்மை விட்டுச் சென்றாலும் மக்கள் எம்முடன் உள்ளார்கள் என்பதை எமது முதலாவது பிரசாரக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளோம்.


அடிமட்ட மக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம். நபர்களை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அரசியலில் ஈடுபடவில்லை. கொள்கைகளை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறோம்.


நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.