Header Ads



கோட்டாபயவின் பலவீனமான அம்சமே, மொட்டுக்கட்சியின் திட்டங்களுக்கு தடை


கோட்டாபய ராஜபக்சவின் பலவீனமான அம்சமே மொட்டுக்கட்சியின் திட்டங்களுக்கு தடையாக அமைந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இதன்போது கட்சி அலுலகத்தில் ஊடகவியளாளர்களிடம் மேலும் கருத்து தெரிவித்த அவர், 


“மகிந்த ராஜபக்சவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை கடந்த காலங்களில் வேறு எந்த தலைவர்களும் கண்டுகொள்ளவில்லை. 


பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவினால் மட்டுமே அந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும்.


கோட்டாபய ராஜபக்சவிடம் பலவீனமான ஒரு அம்சம் காணப்படுகிறது. ஆனால் அதை அப்படியே விட்டுவிட முடியாது.


மகிந்த ராஜபக்ச செய்த பணிகளை கோட்டாபய செய்யாவிட்டாலும், அவரை வெற்றிகரமான தலைவராக நாம் பார்க்கிறோம்.


இதற்கமைய ராஜபக்சவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் பொருத்தமானவர் அவரது மகன் நாமல் ராஜபக்ச.


எனவே,  நாமல் ராஜபக்சவை கட்சி வேறுபாடின்றி ஜனாதிபதியாக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம்,  அண்மைக் காலங்களில் ராஜபக்சவால் கொண்டுவரப்பட்ட அபிவிருத்தியைத் தவிர வேறு எந்த அபிவிருத்தியையும் நாம் காணவில்லை.


மகிந்த சிந்தனையின் தடைப்பட்ட அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதற்கு 38 வயதான இளம் தலைவர்மிகவும் பொருத்தமானவர்” என்றார்.

No comments

Powered by Blogger.