Header Ads



மனிதன் எவ்வளவு அற்பமானவன்...?


ஒருபோதும் பார்க்க விரும்பிடாத,   பார்ப்போம் என்று  கனவில் கூட  நினைத்து பார்க்க முடியாத காட்சிகள்! 


வயநாட்டில்  நேற்று அடையாளம் தெரியாத பல உடல்களுடன் 150க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளை அடக்கம் செய்தனர்!  


கை, கால்கள், உடற்பகுதி..... 

அக்காட்சிகளை ஒன்றும் நேரடியாக பார்க்க முடியாது.

அவ்வளவு வலிகள்

அய்யோ இது என்ன துயரம்.. 

ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தின் தூண்கள், 

நம்பிக்கைகள், 

எதிர்பார்ப்புகள், 

அன்பின் அடையாளங்கள், 

நாட்டின் கனவுகள் 

குழந்தைகள்....

விதி அவர்களை தன் பக்கம் இழுத்துச் சென்று விட்டது. 

யாரும் விரும்பாத ஒரு பயணம்

அனைத்து மதத்தினரும் சேர்ந்து அவர்களை வழி அனுப்பி வைத்தனர். 

மனிதன் எவ்வளவு அற்பமானவன்! 

பலவீனமானவன்?! 

இறைவனின் அருட்கொடைகளின் மதிப்பை உணருங்கள்.  

நன்றியுடன் இருங்கள்.

No comments

Powered by Blogger.