Header Ads



அநுரகுமாரவின் ஆணவமும், வெறுப்பும் - ரணிலுடன், சஜித் கைகுலுக்காதது ஏன்..?


வேட்புமனுத் தாக்கல் நாளின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைகுலுக்கத் தவறியமை தொடர்பில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ் வேளையில் சஜித் வேறு வேலையில் ஈடுபட்டிருந்ததால் எழுந்து நின்று வாழ்த்த முடியாமல் போனதாகவும் SJB இன் துணைத் தலைவர் சுஜீவ சேனசிங்க இன்று தெரிவித்தார்.


“சிலர் இந்த விஷயத்தைப் பற்றி தேவையில்லாத வம்புகளை உருவாக்குகிறார்கள். அதுமட்டுமின்றி பிரேமதாசவை ஜனாதிபதி விக்ரமசிங்க கைகூப்பி வாழ்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 'ஆயுபோவன்' என்று கூறி வாழ்த்துவது ஆரோக்கியமானதாகவும், இனிமையாகவும் இருக்கும் என்பதோடு, வாழ்த்துவதற்கான சிறந்த வழியாகவும் இருந்திருக்கும். இதுவே உண்மையான இலங்கை வாழ்த்து முறையும் கூட” என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


"ஆனால் நிச்சயமாக, கமலா ஹரிஸை ஒருவர் கைகோர்த்து ஆயுபோவன் என்று கூறி வாழ்த்த முடியாது," எனவும் அவர் கூறினார்.


பிரேமதாச ஜனாதிபதியுடன் கைகுலுக்காமல் அகங்காரத்துடன் நடந்துகொண்டார் என தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த சேனசிங்க, அந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் அநுர தனது ஆணவத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

1 comment:

  1. அநுரகுமாரவின் ஆணவமும், வெறுப்பும் - ரணிலுடன், சஜித் கைகுலுக்காதது ஏன்..? என்று நீங்கள் தலைப்பிட்டிருப்பது எப்படிப் பொருந்தும்? யாருக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்? இது பத்திரிகை தர்மமா? மேலோட்டமாகப் பார்த்தால் அநுரகுமார ஆணவத்துடனும் வெறுப்புடனும் நடந்துகொண்டது போலல்லவா தெரிகிறது. முதலில் பத்திரிகைத்துறை - Journalism - பற்றி படியுங்கள்! உங்களுக்குச் சார்பாக மக்கள் இருக்க வேண்டுமென்று செய்திகளைப் பதிவிடாதீர்கள்! இதற்கு மன்னிப்பு தெரிவித்து தலைப்பைத் திருத்தி செய்தியை மீள பதிவிடுங்கள்! அப்போதுதான் உங்கள் பத்திரிகை தர்மம் வெல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.