Header Ads



எங்கே செல்கிறது இந்திய தேசம்...?


கிட்டத்தட்ட ஆறு வருடம் அரும்பாடுபட்டு MBBS முடித்துவிட்டு, மிகவும் சிரமப்பட்டு NEET PG பரீட்சையில் தேர்வாகி PG மருத்துவம் சேருகிறார் ஒரு பெண் மருத்துவர்...! 


அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எவ்வளவு கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருந்திருக்கும்...!?


அவர் செய்த குற்றம்தான் என்ன?


36 மணி நேரம் டூட்டி பார்க்கிறார் !


தான் படிக்கும் வேலை செய்யும் அதே மருத்துவமனை வளாகத்திலே அவருக்கு சற்று இளைப்பாற இடம் இல்லை...!


செமினார் ஹால் சென்று சிறிது ஓய்வு எடுக்கிறார்...!

வெட்கக்கேடான இன்னொரு விசயம் என்னவென்றால் பெரும்பாலான நீதிமன்றங்களில் கூட பெண்களுக்கான, பெண் அலுவலர்களுக்கான, பெண் அதிகாரிகளுக்கான தனித்த கழிப்பறை கூட கிடையாது என்பதுதான்...


செமினார் ஹாலுக்கு உள்ளே செல்லும் போது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தாம் திரும்பி பிணமாக தான் வெளியே வருவோம் என்று.‌‌..!


8-10 பேர் கொண்ட மனித வடிவிலான மிருகங்கள் அவளை தாக்குகின்றன...!!!


எப்படி சமாளிக்க முடியும்? 


கண் கண்ணாடி உடைந்து அவள் கண்களில் குத்தி ரத்தம் வழிகிறது.


கழுத்து எலும்பு உடைக்கப்படுகிறது...!

 உடலெங்கும் காயங்கள்...! பெருங்குரலெடுத்து உதவி கோரக்கூட முடியவில்லை !


10 மிருகங்களும் அவளை கற்பழிக்கின்றனர்...!


பிறப்புறுப்பு சிதைக்கப் படுகின்றது...!


தன் நிலைமையை எண்ணி கண்ணீர் விட்டிருப்பாள்.‌..!

காப்பாற்ற ஒருவரும் இல்லை...!


கழுத்து நெறிக்கப்படுகிறது...!


அவ்வளவு நேரம் அவள் அனுபவித்த வலியில் இருந்து வேதனையில் இருந்து அவளுக்கு நிரந்தர நிவாரணமாக கிடைக்கிறது...!? மரணம்...!

பிணந்திண்ணி கழுகுகளை விட மோசமான மிருகங்கள் அவளின் இறந்த உடலோடு உறவு கொள்கிறார்கள்...! வன்புணர்வுக்கு சவம் கூட மிஞ்ச வில்லை.


அவளின் stethoscope தூக்கி எறியப் படுகிறது!


அவளின் வைட் அப்ரோன் ரத்த கறை படிந்து அவளின் மானம் காக்க முடியாமல் பிடிங்கி வீசப்படுகிறது...!


நிர்வாணமாக அவள் உடலை காட்சிக்கு வைத்துவிட்டு அந்த மிருகங்கள் செமினார் ஹாலை விட்டு வெளியேறுகின்றனர்...!


உயிருடன் இருக்கும் போதே அவளுக்கு ஒரு postmortem நிகழ்ந்து விட்டது...! அதன் பின் உயிரற்ற அவள் உடலுக்கு மீண்டும் ஒரு postmortem...?


அவளின் கனவுகள் அவள் குடும்பத்தின் கனவுகள் மொத்தமும் ஒரு சேர பரலோகம் போயாயிற்று...!


கயவர்களில் ஒருவர் கூட இன்னும் கைது செய்யப்படவில்லை...! வெட்கக்கேடான செயல்...!  


அவளுக்காக அமைதி போராட்டம் நடத்திய மருத்துவர்கள் மீது தாக்குதல்...! இதுதான் ஜனநாயக இந்தியா?


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடி விட்டு இன்று அவளுக்கு சுதந்திரம் இல்லை...!  


சுதந்திரமாக அவளால் ஓய்வு எடுக்க முடியவில்லை...! 


பெண்கள் இயற்கை உபாதைகளுக்குக்கூட ஒதுங்க இயலாத நிலை...!


அவளை கொன்று தின்ற மிருகங்கள் சுதந்திரமாக உலவுகின்றன...!? 

இதுதான் சுதந்திர இந்தியா?

Insta influencers/ மாநில முதல்வர்கள் / பிரதமர்/ நடிகர்கள் / பொது மக்கள் / அரசியல்வாதிகள் என்று யாரும் குரல் எழுப்பமாட்டார்கள்...! 

நாலு நாள் முன்னாடி நாக சைதான்யாவிற்கு இரண்டாவது நிச்சயதார்த்தம் என்று சமந்தாவிற்காக வருத்தம் தெரிவித்தவர்கள் Dr.Moumita வின் கொடூரமான இறப்பின் பொது ஊமை ஆகிவிட்டது ஏன்?

வினேஷ் போகத் தவற விட்ட தங்க பதக்கத்திற்காக பொங்கி எழுந்த மக்கள் Dr.Moumita வின் மரணத்தின் போது குருடாகி போனதேன்? 

கௌரவர்கள் சபையில் பாஞ்சாலி துகிலுரிய பட்ட போது காப்பாற்ற அந்த கண்ணன் வந்தான்?!  ஆனால் இன்று இங்கு அதுபோல் யாரும் இல்லை...!

கொல்கத்தாவில் நடந்தது நாளை சென்னையில் நடக்கும்...! மறுநாள் பெங்களூருவில் நடக்கும்...! அப்புறம் குஜராத் இன்னபிற மாநிலங்களில் தலைநகரங்களில் உங்கள் ஊரில் என நடக்கும்... பிறகென்ன உங்கள் தெருவில், பக்கத்தில், அப்படியே உங்கள் வீட்டிலும் நடக்கலாம்...!

குற்றவாளியை பிடித்து நிறுத்தி மிகக் கொடூரமான தண்டனை வழங்க வேண்டும்...! 

மக்கள் மருத்துவர்களை மறப்பது எப்போதும் நடக்கும் ஒன்று...!

அவர்கள் மருத்துவர்களை கடவுள் என்பார்கள்!

திருவிழாக் காலங்களில் கடவுளை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதன் பின் தூக்கி போட்டு போய்விடுவார்கள்.

Corona வரட்டும், மர்ம காய்ச்சல் வரட்டும் அவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மலர் தூவுவார்கள்! அதன் பின் மண்ணை தூவுவார்கள் ! இது பழக்கபட்டது தான்.

புன்னகைத்து விட்டு பின்னகத்தில் குத்தும் அரசியல்வாதிகளையும் நாம் அறிவோம்!

வெள்ளை அங்கி அணிந்து எதிர் கால கனவுகளுடன் மற்ற தோழமைகளோடு சேர்ந்து hippocrates oath எடுத்து சேவை செய்து வந்த சகோதரி இன்று நமக்கு அருகில் ரத்தம் சொட்ட செத்துக் கிடக்கிறார்! அவரின் உடல் அழுகும் முன் அவருக்கு நீதியாவது வாங்கி தர நாம் முயல வேண்டும்!

ஒரு பெண் தனியாக இரவில் நகை அணிந்து நடமாட முடியுமென்றால் அதுவே சுதந்திரம் என்றார் மகாத்மா!

இன்று தனியாக ஒரு பெண் சுதந்திரமாக ஓய்வெடுக்க கூட முடியாத நாளில் நமக்கு 78வது சுதந்திர தினம்...!!

பாரத மாதா தப்பித்தாள்... ஏனெனில் இந்த காம கொடூர மிருகங்களின் கண்களுக்கு அவள் தெரிவதில்லை! இல்லையென்றால் அவளையும் கற்பழித்து சீரழித்து இருப்பார்கள் இந்நேரம்...!

எங்கே செல்கிறது இந்தியா...? எதை நோக்கி செல்கிறோம் நாம்...??

காலம் கருணையற்றது...!காத்திருப்போம்...!!

#justice_for_dr_moumita

பகிர்வு

No comments

Powered by Blogger.