Header Ads



ஜனாதிபதி ரணிலுடன் ஒன்றிணையுமாறு மனுஷ அழைப்பு


ஹம்பாந்தோட்டை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் இன்று (29) நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு ஜனாதிபதி ஆலோசகர் மனூஷ நாணாயக்கார ஆற்றிய  உரை


''சவாலுக்கு அஞ்சி ஓடி ஒளிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என நான் முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கடந்த தேர்தல்களில் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்காவிட்டாலும் இந்நாட்டை நேசிக்கும் தலைவர் என்ற வகையில் நாடு வீழ்ச்சியடைந்தபோது மக்களைப் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். 


மக்கள் படும் துன்பத்தைப் பாதுகாத்துக்கொண்டிராத தலைவர் என்ற வகையிலேயே அவர் இந்த நாட்டைப் பொறுப்பேற்றார். கடந்த பொருளாதார நெருக்கடி ஒரு திரைப்படம் என்றால் நாம் அதன் இடைவேளையில் இருக்கிறோம். இப்போது மக்கள் தீர்மானிக்க வேண்டும். 


நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதா அல்லது அலைகளில் சிக்கி மீண்டும் இருண்ட யுகத்திற்குச் செல்வதா? என்று தீர்மானிக்கும் நாள் தான் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி. இன்று இந்த நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்லப்பட வேண்டுமாயின் அது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனேயே முடியும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். 


இம்முறை வாக்களித்துப் பார்ப்போம், என்று பரீட்சித்துப் பார்க்கும் செயலைச் செய்து அதலபாதாளத்தில் விழுவதா? என்று மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமுல்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாடு என்னவாகும் என்பதற்கு இன்றைய பங்களாதேஷ் ஒரு நல்ல உதாரணமாகும்.  இன்று நீங்கள் பாருங்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஜே.வி.பியின் கட்அவுட்கள், பேனர்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பாரிய மின்விளம்பர பதாதைகளுடன் கூடிய பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. 


இவற்றுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது? கடந்த காலங்களில் அவர்கள் உண்டியல்களைக் குலுக்கி கட்சிக்கு நிதி சேகரித்தது போன்று இதற்கும் உண்டியல்களை குலுக்கித் தான் பணம் சேகரிக்கின்றார்களா? என்று கேட்க விரும்புகிறேன். இல்லை. இலங்கை போன்று எமது பிராந்திய நாடுகளை வீழ்ச்சியுறச் செய்யும் சில நாசகார குழுக்கள் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை தடுத்து மீண்டும் எமது நாட்டை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைச் செய்ய பாரிய அளவில் பணத்தைச் செலவழிக்கிறார்கள். 


இப்போது ஜே.வி.பியின் கற்பனைக் கதைப் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 98 ஆம் பக்கத்தில் சுவாரசியமான ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகப் பொருளாதாரம் உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டடுள்ளது. நான் அப்படி என்றால் என்று தேடிப்பார்த்தேன். இவர்கள் கூறும் ஜனநாயகப் பொருளாதாரம் என்பது கஷ்டப்பட்டு, உழைத்து பணம் சம்பாதிப்பவர்களிடம் இருந்து ஏனையவர்களுக்கு கொடுத்து அனைவருக்கும் பொருளாதார ரீதியில் சமமாக பகிர்ந்தளிக்கும் கலாசாரத்தை உருவாக்குவதே இவர்களின் திட்டமாகும்.


நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை பறித்தெடுக்கும் முறையையே அவர்கள் முன்னெடுக்கப் போகிறார்கள். நாம் திசைகாட்டிக்கே என்று வெளிநாடுகளில் இருந்து கொண்டு எமது நாட்டில் அலைகள் ஏற்படுத்தப்படுவதால் முதலீட்டாளர்கள் இன்று அச்சப்பட்டு அவர்களின் பணத்தை வெளிநாடுகளிலேயே வைத்தக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.  இதுதான் வெளியில் இருந்து கொண்டு நாட்டை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையச் செய்யும் திட்டமாகும் என்பதை உங்களுக்கு கூற விரும்புகிறேன். 


இவ்வாறு செய்ய முடியாத அலைகள் இன்றி இந்த நாட்டில் யதார்த்தபூர்மாக்கக் கூடிய திட்டங்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முன்வைத்துள்ளார். அந்தவேலைத் திட்டத்துடன் ஒன்றினையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.


ஊடகப் பிரிவு

Ranil 2024 –  இயலும் ஸ்ரீலங்கா

29-08-2024


No comments

Powered by Blogger.