Header Ads



அரசாங்கத்திற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆயுள்காலம் உள்ளது..?


பாராளுமன்றத்தில் இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் 134 வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட தற்போதைய ஜனாதிபதிக்கு 92 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே இருப்பதாகவும் தனிப்பெரும்பான்மையைக் கூட அரசாங்கம் இழந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்தார்.


தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் இன்னும் 46 நாட்களில் முடிவடையும் என தெரிவித்த பீரிஸ், மாபெரும் கூட்டணி இம்மாதம் 8ஆம் திகதி உருவாக்கப்படும் என்றார்.


கொழும்பில், ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.


முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய அரசாங்கம் நீதித்துறை மீது பாரிய தாக்குதலை நடத்தி வருவதாகவும், தற்போதைய ஜனாதிபதி நீதித்துறை அமைப்பின் நீதிபதிகளை பகிரங்கமாக விமர்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.