Header Ads



இரத்து செய்யப்படும் இலட்சக்கணக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள்


2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.


அந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிப் இல்லாமல் எட்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டியவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.


கடந்த காலங்களில் அச்சிட முடியாத சுமார் 300,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் குவிந்து கிடப்பதாகவும் கூறியுள்ளார்.


எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அந்த அனுமதிப்பத்திரங்களை அச்சடித்த பின்னர் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் குறிபிட்டுள்ளார்.


பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் புத்தகங்கள் மற்றும் வெள்ளை அட்டைகளில் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் பதினான்கு இலட்சம் கனரக வாகன அனுமதிப்பத்திரங்கள் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


நாட்டில் அதிகமானோர் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு டிமெரிட் புள்ளிகளை சேர்க்கும் டி மெரிட் முறையும், மதிப்பெண் பெற்ற சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தினை தற்காலிகமாக இரத்து செய்யும் முறையும் அடுத்த சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.


இந்த முறையில் பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


எனவே, பழைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் போக்குவரத்து மருத்துவ சான்றிதழைப் பெற்று புதிய சாரதி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.