Header Ads



மக்களோடு நெருங்கி இருப்பது நான்தான் - சஜித்


வறுமையை ஒழிப்பது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. அரசாங்கத்தின் தரமற்ற கொள்கைகள் காரணமாக பெரும்பான்மையானோர் வறுமையில் சிக்கியிருக்கின்றார்கள். மக்களை ஓரங்கட்டி செல்வந்தர்களை பாதுகாக்கின்ற அரசாங்கமாக மாறியிருக்கின்றது. இந்த அரசாங்கத்தால் விவசாயிகளின் விவசாய கடனை இரத்து செய்ய முடியாவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக விவசாய கடனை இரத்து செய்வோம்.


அரச வங்கிகளுக்கு கடனை செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை ஜனாதிபதியிடமும் நிதி அமைச்சரிடமும் கோரியிருந்த போதும், அவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. நட்புறவுகள் காரணமாக கோடிக்கணக்கான பணத்தை மீளப் பெறாது இரத்து செய்து இருக்கின்றார்கள். மிகப்பெரிய செல்வந்தர்களின் கடனை இரத்து செய்ய முடியும் என்றால், விவசாயிகளின் கடனையும் இரத்து செய்ய முடியும். ஐக்கிய மக்கள் சக்தி செல்வந்தர்களை பாதுகாப்பதில்லை. கீழ்மட்ட பொதுமக்களை பாதுகாப்பதற்காகவே எமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த மக்கள் வெற்றிப் பேரணியின் 27 ஆவது பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நிக்கவெரட்டிய நகரில் இன்று(30) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.


வறுமையில் சிக்கி இருக்கின்ற மக்கள் தொடர்ந்து வறுமையோடு வாழ முடியாது என்பதால் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. வறுமையை போக்குவதற்காக ஜனசவிய, அஸ்வெசும கெமிதிரிய மற்றும் சமூர்த்தி ஆகிய வேலைத்திட்டங்களின் சிறந்த விடயங்களை உள்ளடக்கி, நுகர்வு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து பிரிவுகளுக்குள் உள்ளடக்கி, அவர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா வீதம் வழங்கப்பட இருக்கின்றது. பெண்களுக்கு இந்தத் தொகை பணம் வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.


🟩 அரச ஊழியர்களுக்கு சிறந்த காலம்


நாட்டுக்கு வளமான அரச சேவைக்காக 24% சம்பள அதிகரிப்பையும், 17800 ரூபாவாக உள்ள வாழ்க்கைச் செலவை 25,000 ரூபா வரை அதிகரிப்பதோடு, 57,500 ரூபா அடிப்படைச் சம்பளமாக வழங்குவதோடு, ஆறு வீதத்திலிருந்து 36 வீதம் வரை காணப்பட்ட வரிச் சூத்திரத்தை ஒன்று தொடக்கம் 24 வீதம் வரை அரச ஊழியர்களுக்கும் நடுத்தர வகுப்பினருக்கும் நிவாரணமான முறையில் குறைத்து, அவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸ் சேவையில் உள்ளவர்களுக்கு மூன்று மாதங்களுகு மாத்திரம் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டாலும், அதனை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, பொலிஸ் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.


🟩 அரிசி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி.


அத்தோடு நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குவதோடு நாடு, சம்பா, கீரி சம்பா, கெகுளு போன்ற அரிசிகளுக்கு அதிகரித்த விலை காணப்பட்டாலும், விவசாயிகளுக்கு குறைந்த தொகையே விலையே கிடைக்கின்றது. நுகர்வோரிடமிருந்து அதிக தொகை பெறப்படுவதனால் ஊழல் இடம்பெறுவதோடு மாபியாவும் உருவாகின்றது. அரிசி மாபியாவை நிறுத்தி விவசாய மக்களை பாதுகாக்கின்ற யுகத்தை உருவாக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.


🟩 வாய்ச்சொல் தலைவர்களுக்கு வெற்றுப் பேச்சுக்கள் மாத்திரமே தெரியும்.


வேலை செய்ய முடியாத வாய்ச்சொல் காரர்கள் இதனை செய்ய முடியாது என்று கூறினாலும், வாய்ச்சொல் தலைவர்கள் இதனைச் செய்ய முடியாது என்றாலும், தன்னால் இதனைச் செய்ய முடியும். 76 வருட கால ஜனநாயக வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் வேலை ஒன்றை செய்ய முடியுமான ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும். பிரபஞ்சம், மூச்சு போன்ற வேலைத்திட்டங்கள் ஊடாக பில்லியனுக்கு கணக்கான வேலைகளை இந்த நாட்டுக்கு செய்திருக்கின்றோம். நாம் இதனைச் செய்கின்ற போது வாய்ச்சொல் தலைவர்கள் வெறுமனே பிதற்றிக் கொண்டிருந்தார்கள்.


🟩 கடவுச்சீட்டுக்களை வழங்க முடியாத ஜனாதிபதி நாட்டை முன்னேற்றுவாரா.


இதன் காரணமாக பொறாமை, தந்திரம் மற்றும் வேலை செய்ய முடியாத இவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம்.  இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் அவருக்கு முறையாக கடவுச்சீட்டுக்களையே வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. கடவுச்சீட்டுக்களை வழங்க முடியாத இந்த ஜனாதிபதி நாட்டையும் கிராமத்தையும் முன்னேற்றுவார் என்று நம்பிக்கை கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


🟩 மக்களின் கவலையை போக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இருக்கின்றது.


மக்களுக்கு சிக்கல்களும் பாதிப்புக்களும் அனர்த்தங்களும் ஏற்படுகின்ற போது மக்களின் துன்பத்தை இன்பமாக மாற்றுகின்ற, அவர்களின் சவால்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கின்ற போது முதன் முதலில் யாருடைய பெயர் நாமம் நினைவுக்கு வருகின்றது என்பதனை அவதானித்து பாருங்கள். மக்களை பாதுகாப்பது உதவி செய்வது மக்களை வாழ வைப்பது யார் என்று மனப்பூர்வமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது மக்களோடு நெருங்கி இருப்பது சஜித் பிரேமதாச தான் என எதிர்க்கட்சித் தலைவர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்டினார்.


🟩 தீர்வு ஐக்கிய மக்கள் சக்தியினமே இருக்கின்றது.


வாய்ச்சொல் தலைவர்களிடமும், பிரபு வர்க்கத்திற்காக முன்னெடுக்கின்ற கோர்ட் அணிந்தவர்களிடமும் தீர்வு இல்லை. மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது மக்களோடு இருக்கின்ற ஐக்கிய மக்கள் சக்தியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.