Header Ads



றிசாத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை, ரத்துச்செய்து தேர்தலுக்காக பயன்படுத்துகின்றனர் - சஜித்


தேர்தல் காலங்களில் அரச நிதியை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது,  சட்டவிரோதமான குற்றமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்று(21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 


ரிஷாட் பதியுதீன் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கொண்டமையால்  அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை  இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை  எடுத்திருக்கிறது. 


அரசாங்கத்துக்கு  ஒத்துழைப்பு வழங்குகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 300 மில்லியன் ரூபா  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை  ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக  பயன்படுத்தி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில்  ஈடுபடாமல் இருக்குமாறு அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்காக  தேர்தல்கள் ஆணைக்குழு தலையீடு செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்  இதன்போது கோரிக்கை விடுத்தார்.

No comments

Powered by Blogger.