Header Ads



இலங்கையில் அமெரிக்க போர்க் கப்பல்


அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.


USS Spruance என்ற கப்பல் இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.


விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே குறித்த கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


சுமார் 160 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 338 பேர் பயணிக்க முடியும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் நாளை (20) இந்த கப்பல் நாட்டை விட்டு புறப்பட உள்ளது.

1 comment:

  1. விநியோக, சேவைச் சேவைகளை இலங்கையில் வழங்க என்ன இருக்கின்றது. ரணில் சொல்வது போல் நாடு முன்னேறியிருக்கின்றது. ஐஎம்எப் இன் வேண்டுகோள்கள் நிறை வேற்றப்பட்டு டொலர்கள் கோடான ​கோடி கொட்டிக் கொண்டிருக்கின்றது. அப்படியானால் அமெரிக்க கடற்படையின் தற்போதைய சேவை என்ன என்பதை அறிய பொதுமக்கள் ஆவலாக உள்ளனர்.அதுபற்றி அலி சப்ரி என்ன கருத்துக்களையும் முன்வைத்ததாகவும் தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.