Header Ads



தேர்தலில் பெண்களுக்கு தட்டுப்பாடா..? ஆண்களே காரணம்


ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இலங்கையில் மீண்டும் ஆண் ஆதிக்கம் முன்னிலைப் பெற்றுள்ளது.


இதன்படி 2024ஆம் ஜனாதிபதி தேர்தலில் எந்தப் பெண் வேட்பாளர்களும் போட்டியிட முன்வரவில்லை.


பாலின சமத்துவத்திற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்த போதிலும்,  இலங்கை அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை எடுத்துக்காட்டும் வகையில், எந்தவொரு பெண்ணும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்வரவில்லை.


வரலாற்று ரீதியாக, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை மூன்று பெண்கள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.


மறைந்த காமினி திசாநாயக்கவின் மனைவியான சிறிமா திஸாநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இருவரும் 1994இல் போட்டியிட்டனர். இறுதியில் குமாரதுங்க  இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவானார்.


மூன்றாவது பெண் போட்டியாளராக, கல்வியாளர் அஜந்தா பெரேரா 2019இல் களத்தில் பிரவேசித்தார்.


இந்தநிலையில், பெண் வேட்பாளர்கள் போட்டியிடாமைக்கு, ஆண் ஆதிக்க அரசியல் கலாசாரமே காரணம் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.


பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு தொடர்பில் குறிப்பிட்ட அவர், அரசியல் வேட்புமனுவில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கையின் நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 5.8 வீதமாகவே உள்ளது.


இதேவேளை, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.