ஜனாஸா எரிப்பு: மன்னிப்புக் கோரியது அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல
அரசாங்கம் கொவிட்-19 இறுதிச் சடங்கு கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளமையானது முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியா என ஆங்கில இணையத்தளம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நிச்சயமாக இது அரசியல் நோக்கத்தில் முன்னெடுக்கப்படவில்லை. டாக்டர் சன்ன ஜயசுமான, டாக்டர் மெத்திகா வித்தானகே மற்றும் தொழில்நுட்பக் குழுவினால் முன்வைக்கப்பட்ட நிலத்தடி நீரினால் கொவிட் வைரஸ் பரவும் என்ற வாதத்தை முறியடிப்பதற்காக நாம் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. வாசுதேவ நானயக்கார நீர் வழங்கல் அமைச்சராக இருந்த போது அவரது முயற்சியில் இரண்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் காலத்திலேயே அந்த அறிக்கைகளின் முடிவுகள் கிடைத்தன. அந்த அறிக்கையை சில காலத்திற்கு முன்பு நான் அமைச்சரவையில் சமர்ப்பித்தேன். எனினும் அவர்கள் அப்போது அதை ஒத்திவைக்க விரும்பினர். எனினும் அனைத்து அறிக்கைகளும் கிடைத்ததால், அதற்கான முனனெடுப்புகளை விரைவு படுத்தினோம். அதற்கு அமைச்சரவை அனுமதியளித்தது.
அதைத் தொடர்ந்து ஒரு புதிய சட்டத்தை நான் பரிந்துரைத்து, வரைவு செய்து அமைச்சரவையின் முன் வைத்தோம். தொற்றுநோய் போன்ற சூழ்நிலையில் மக்களுக்கு அவர்களின் இறுதிச் சடங்கு முறையைத் தேர்வு செய்யும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அமைச்சரவை இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றியது. உலக சுகாதார நிறுவனம் ஒரே ஒரு முறையை மட்டுமே பரிந்துரைக்கும் போது மட்டுமே விதிவிலக்கு. இல்லையெனில் மக்கள் தங்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் விருப்பமான முறையில் இறுதிச் சடங்கை முன்னெடுக்க புதிய சட்டம் அனுமதியளிக்கிறது.
எனவே இது அரசியல் நிகழ்ச்சி நிரல் அல்ல. நாட்டுக்குத் தேவையான சரியான நடவடிக்கையையே நாம் செய்தோம். – Vidivelli
Post a Comment