Header Ads



வைத்தியரின் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்காதீர்கள்


அறியாமல் குழந்தைகளுக்கு பராசிட்டமால் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக  குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக  தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்துள்ளார்.


வைத்தியரின் பரிந்துரைகளில் பராசிட்டமால் இருந்தால் மட்டுமே மருந்தை கொடுக்க வேண்டும். எனினும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பராசிட்டமால் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மேசமான நிலைக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.


சில பெற்றோர்கள் காய்ச்சல் கண்டறிந்தால் பராசிட்டமாலை அதிக அளவில் கொடுக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்க அறிவுறுத்துவதாகவும் கூறுகிறார்.


குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு பாராசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டுமா என்றும், மேலும் குழந்தைக்கு கூடுதல் டோஸ் பாராசிட்டமால் கொடுக்க வேண்டுமா என்றும் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இது தொடர்பாக ஏதேனும் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டா

No comments

Powered by Blogger.