“எனக்கு அருகில் ஒரு, சலூன் கதவு உள்ளது"
தன்னைக் கைவிட்டு ரணில் விக்ரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தச் சென்றவர்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுடன் கண்டி தலதா மாளிகையில் தரிசனம் செய்து மகா நாயக்க தேரர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தேர்தலும் சவாலானது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நாமல் ராஜபக்ச வெற்றியீட்டுவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், கட்சியை விட்டுச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு மகிந்த ராஜபக்ச சிரித்துக் கொண்டே , “எனக்கு அருகில் ஒரு சலூன் கதவு உள்ளது. நீங்கள் செல்லலாம். நீங்கள் வரலாம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் ” எனவும் பதிலளித்தார்.
இம்முறை வாக்களித்து இந்த நபர் செத்துமடிந்தால் இந்த நாட்டின் விடிவின் ஆரம்பம் வரும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ReplyDelete