ஹனியா படுகொலை - ரிஷாத் வெளியிட்டுள்ள அறிக்கை
ஆக்கிரமிப்பினை மட்டும் கொண்டு ஹமாஸ் மக்களையும்இ சிறுவர்களையும்இகர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் என பாராது கொடூரமான முறையில்கொன்றொழிக்கும் இஸ்ரேலின் இந்த செயலை நான் பிரதி நிதித்துவம் செய்யும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸானது வண்மையாக கண்டிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளர்.
இதுதொடர்பில் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை-பலஸ்தீன உறவு என்பது பல ஆண்டுகள் நெருக்கமானது, இந்த உறவானது எம்மில் இருந்து பிரிக்க முடியாததொன்று என்பதால் தான் நாம் இழப்புக்களின் வேதனையை உணர்கின்றோம். பாலஸ்தீனத்தின் போராட்டம் என்பது உலகலாவிய வல்லரசுகள் கூட நியாயம் கண்டுள்ள நிலையில்இஇஸ்ரேல் தொடர்ந்து கட்டுக்கடங்காதுஇ இ காட்டுமிராண்டித்தனமாக மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அம்மக்களை மேலும் பல இழப்புக்களுக்குள் தள்ளிவருகின்றது.
அப்பட்டமான மனிதஉரிமை மீறல்களாக இந்த படுகொலை காணப்படுவதாகவும், எல்லை மீறும் இஸ்ரேலின் இந்தமோசமான மனித படுகொலையினை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டுவதுடன்இ இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் மர்ஹூம் இஸ்மாயில் ஹனியாவின் மறைவுக்கு எமது கட்சி ஆழ்ந்த கவலையினை வெளிப்படுத்துகின்றதுஇஅதே போல் சஹீதுடைய அந்தஸ்தினை எல்லாம் வல்ல அல்லாஹூத்தாஆலா அவருக்கு வழங்க பிரார்த்தனை செய்கின்றேன்.
Post a Comment