Header Ads



றிசாத், சுஜீவ, டலஸ், அர்ஜுன, சம்பிக்க, சுமதிபால, சஜித் மீது மனுஷ கடும் விமர்சனம்


ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மேலும் நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்கள் அடுத்த சில நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக மொத்தம் பதினான்கு SJB உறுப்பினர்கள் ஏற்கனவே தமது ஆதரவை வழங்கியுள்ளனர் என நிகழ்வொன்றில் உரையாற்றிய நாணயக்கார தெரிவித்தார்.


SJB யில் தற்போது ஒரே விடயங்களை ஏற்றுக்கொள்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என சமனான குழுவான்று இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். 


வில்பத்து வனப்பகுதியை வெட்டிய றிசாத் பதியுதீன் மற்றும் அதனை எதிர்த்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தற்போது SJB கொண்டுள்ளது. பத்திரப்பதிவு மோசடி குறித்து புத்தகங்களை எழுதிய சுஜீவ சேனசிங்க, அதேபோன்று இந்த மோசடியை பகல் கொள்ளை என்று கூறிய டலஸ் அழகப்பெருமவும் கட்சியில் உள்ளனர்.


சூதாட்டத்தால் கிரிக்கெட் நாசமாகிறது என்று கூறிய அர்ஜுன ரணதுங்கவும், சூதாட்டத்தை நடத்தும் திலங்க சுமதிபாலவும் இருக்கிறார். ஆங்கிலம் பேசுவதன் மூலம் கடன்களைப் பெறுவதை விமர்சித்த சம்பிக்க ரணவக்கவும் அதே சமயம் ஆங்கிலத்தில் பேசி கடன் பெற முயற்சிக்கும் சஜித் பிரேமதாசவும் கட்சியில் உள்ளனர்” என்று மனுஷ நாணயக்கார கூறினார். 


SJB இன் மேலும் சில உறுப்பினர்கள் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரத்தின் கீழ் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) அளுத்கமவில் நடைபெற்ற இளைஞர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.