Header Ads



ஹக்கீமும் றிசாத்தும் ஜனாதிபதியிடம் உதவி பெற முடியும் - வீடுகளை எரிப்பது நியாயமானது


 நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


கட்சி என்ற ரீதியில் தாம் வலுவாக இருப்பதாகவும், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த போதும் சிலர் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ராஜபக்சக்கள் காரணமாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு உதவுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


தற்பொழுது ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேசி தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியூதீன் போன்றோருக்கு பேசி உதவி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.


மொட்டு கட்சியின் சிங்கள பௌத்த வாக்கு அடிப்படையினால் தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் ஜனாதிபதியுடன் இணையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டதாக கூறியுள்ளார்.


தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் பேசி அவர்களது ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எண்ணிக்கை விளையாட்டில் ஈடுபட எம்மாலும் முடியும் எனவும் எனினும் அவ்வாறு செய்து அவர்களின் நிலைமைக்கு கீழே இறங்க நாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தேர்தலின் போது மக்கள் யாருடன் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை சில அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். 


இவ்வாறான ஓர் பின்னணியில் அரசியல்வாதிகளை தாக்கி வீடுகளை எரிப்பது நியாயமானது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. இந்த பேச்சை வாசிக்கும் போது இந்த நபர் அங்கொடையில் தொடர்ந்தும் நீண்ட காலம் மருத்துவத்தைத் தொடர வேண்டிய நபர் என்பது உறுதியாகின்றது. பொதுவாக தேர்தல் காலங்களில் இந்த நோய் அதிகரிப்பதைப் போல வேறு காலங்களில் அதிகரிப்பதில்லை. பிரச்சினை என்னவென்றால் அங்கொடையில் தற்போது இருக்கும் மருந்துகளும் ஏற்கனவே கெஹெலிய கமிசன் பெற வாங்கிய தரம் குறைந்த மருந்துகளான படியால் அவை இந்த பெரிய நோய்களுக்கு ஈடுகொடுப்பதில்லை. ராஜபக்சையும் கெஹெலியவும் சேர்ந்து திறைசேரியைச் சூறையாடியதால் நல்ல மருந்துகள் வாங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.