தேர்தல் காலத்தில் அரசாங்கம், மானியங்களை வழங்குவதை ஏற்க முடியாது
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
இதேவேளை, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க மானியங்களை வழங்குவது அவசியமானால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதனை நிறைவேற்ற முடியும் என பெஃப்ரல் இன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
Post a Comment