அநுரகுமார வழங்கிய பத்வா
செப்டெம்பர் 21 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியியின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றே எமக்குத்தேவை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதில் பலனில்லை. உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும். கடந்த காலத்தில் எமது நாட்டில் இனவாத அரசியலே நிலவியது. தெற்கில் முற்றாகவே சிங்கள இனவாதமே வெற்றிபெறுகின்றது. அதற்கு மாறாக கிழக்கில் முஸ்லீம் இனவாதம் மேலோங்குகின்றது. அதைப்போலவே வடக்கிலும் தமிழ் இனவாதம் கட்டிவளர்க்கப்படுகின்றது. மக்கள் மத்தியில் இனவாதம் இல்லாவிட்டாலும் ஒரு இனவாதத்தால் மற்றுமொரு இனவாதத்தை கட்டிவளர்க்கக்கூடிய அரசியலை முன்னெடுத்துவர அரசியல்வாதிகள் முயற்சிசெய்தார்கள். 2019 இல் கோட்டாபய வெற்றிபெற்றமைக்கான பிரதான காரணம் இனவாதமாகும். 2015 இல் தோல்விகண்ட ராஜபக்ஷாக்கள் மீளவும் எழுச்சிபெற்றது ஊழல், மோசடி, ஜனநாயகம், தேசிய ஒற்றுமை போன்ற விடயங்களின் அடிப்படையிலல்ல. இவர்கள் அரச அனுசரணையுடன் முஸ்லீம் மக்களுக்கு எதிரான அரசியல் கருத்திட்டமொன்றை ஆரம்பித்தார்கள். மலட்டு கொத்து, மலட்டு உடைகள், மலட்டு மருத்துவர்களின் பின்னர் உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடாத்தினார்கள். 2019 ஏப்ரல் 19 ஆந் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தினத்திலேயே கோட்டாபய வெற்றிபெறுவது உறுதியாயிற்று. அதற்கான காரணம் இனவாதமாகும்.
கொவிட் பெருந்தொற்றினால் மனிதர்கள் இறந்தால் ஏனைய நாடுகளில் நல்லடக்கம் மற்றும் தகனம்செய்தல் ஆகிய இரண்டையுமே மேற்கொண்டவேளையில் இலங்கை அரசாங்கம் மாத்திரம் தகனம் செய்யவேண்டுமென்ற முடிவினை எடுத்தது. இனவாதத்தின் அடிப்படையில் அமைக்கின்ற அரசாங்கம் இனவாதத்தின் அடிப்படையிலேயே செயலாற்றும். உங்கள் மார்க்க நம்பிக்கைக்கிணங்க உங்கள் உறவினரொருவர் இறந்தால் ஈமக்கிரியைகளை செய்யவேண்டியது உயிருடன் இருப்பவர்களின் பொறுப்பாகும். எனினும் அந்த நம்பிக்கைக்கு எதிராக தகனம் செய்யவேண்டியநிலை உங்களுக்கு ஏற்பட்டது. ஒருசிலர் அவர்களை தகனம்செய்யவேண்டி ஏற்படுமென அதனை மறைத்தார்கள். இனவாத அரசாங்கங்கள் இனவாதத்தின்படி நடந்துகொள்வதால் மேலும் வேதனைகள் அதிகரிக்கும். அதனால் இனவாதத்திற்கு கட்டுப்படாத இனவாதத்தை நிகழ்ச்சிநிரலில் கொண்டிராத அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும். மொட்டு என்பது இனவாதத்தின் சேர்க்கையாகும். இப்போது அதன் ஒரு சிறுதுண்டு மகிந்தவுடனும் இருக்கிறது. 2019 இல் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்ட எஞ்சிய பகுதி சஜித்துடனும் இருக்கிறது.
முஸ்லீம் விரோத அரசாங்கத்தில் இருந்தவர்கள் தற்போது ரணில், சஜித், நாமலுடன் மூன்றாக பிரிந்து இருக்கிறார்கள். சஜித் பிரேமதாச கிழக்கிற்கு வரும்போது சம்பிக்க ரணவக்கவை ஒளித்துவைத்துவிட்டு ஹக்கீமோடு வருகிறார். ஆனால் தெற்கிற்கு போவது சம்பிக்கவுடனேயே. மாத்தறைக்கு ஹக்கீம் அல்லது ரிஷாட்டுடன் போவதில்லை. சம்பிக்க, திலங்க, கொடஹேவா போன்றவர்களுடனேயே அங்கு போகிறார். இது இரட்டைவேடமல்லவா? மகரகம இனவாத மேடையில் சம்பிக்கவும் திலங்கவும் ஒரே மேடையில் இருந்தார்கள். அவர்கள் இருவருமே தற்போது சஜித்தின் மேடையில். வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவாத அரசியலை சுமந்துசென்றவர்கள் இப்போது மூன்றாகப் பிரிந்து உள்ளார்கள். வரலாற்றில் ஒருபோதுமே இனவாதத்தை தமது அரசியலுக்காக பாவித்திராத ஒரே இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும். நீங்கள் உண்மையாகவே இனவாதத்திற்கு எதிரானவர்களெனில் தேசிய மக்கள் சக்தியை மாத்திரமே தெரிவுசெய்துகொள்ள வேண்டும். இனவாதத்திற்கு எதிரானவர்களெனில் சஜித்திற்கோ ரணிலுக்கோ புள்ளடியிட வேண்டாம். இனவாதத்திற்கு எதிரான தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கம் தேவையென்றால் தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே புள்ளடியிட வேண்டும்.
முழுநாடுமே ஒரேவிதமாக பயணிக்கையில் கிழக்கு மாத்திரம் வித்தியாசமான பாதையில் போகுமா?
தெற்கின் பெரும்பான்மை சிங்கள மக்கள் திசைகாட்டியுடனேயே இருக்கிறார்கள். தெற்கு. சபரகமுவ, மேற்கு, வடமத்திய, மத்திய, வடமேல் ஆகிய எல்லா மாகாணங்களிலும் பெரும்பான்மை மக்கள் எங்களைச் சுற்றியே இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கேட்பது "தோழர் கிழக்கு என்னவாகும்" என்று. முழுநாடுமே ஒரேவிதமாக பயணிக்கையில் கிழக்கு மாத்திரம் வித்தியாசமான பாதையில் போகுமா? இந்த தடவை தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நடைபெறப்போவது ஜனாதிபதி தேர்தலாகும். இப்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளை அளித்து பொதுத்தேர்தல் வந்ததும் உங்கள் பிரதேசத்திற்கு அவசியமான உறுப்பினர்களைத் தெரிவுசெய்து கொள்ளுங்கள். ஆனால் அவ்வாறு தெரிவுசெய்யும்போதும் சரியானவரைத் தெரிவுசெய்யுங்கள். 2019 இல் முஸ்லீம் காங்கிரசிற்கு புள்ளடியிட்டு தௌபிக்கை பாராளுமன்றம் அனுப்பினீர்கள். பைசர் காசீமை பாராளுமன்றம் அனுப்பினீர்கள். அவர்கள் கோட்டாபயவை தோற்கடிப்பதற்காக வாக்கு கேட்டவர்கள். கோட்டாபயவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காகவே அரசியலமைப்பிற்கான இருபதாம் திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. நீங்கள் கோட்டாபயவிற்கு எதிராக வாக்குகளை அளித்தாலும் அவர்கள் பாராளுமன்றம்போய் கோட்டாயவின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக வாக்களித்தார்கள். ஜனாதிபதி தேர்தலில் எங்களுக்கு வாக்களித்து இறந்தகாலம் பற்றி சிந்தித்துப்பார்த்து பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் விரும்புகின்ற தலைவருக்கு வாக்களியுங்கள். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் கொள்கைகள் கிடையாது, விடயங்கள் கிடையாது, அதனால் சேறு பூசிக்கொண்டு, குறைகளைக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் சிங்களப் பிரதேசங்களுக்குச் சென்று வந்தால் பெரஹெராவை நிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் வந்ததும் தானம் வழங்குவதை நிறுத்திவிடுவதாக ஒருசில பிக்குமார்கள் கூறுகிறார்கள். சிங்கள மக்களிடம் அவ்வாறுகூறி முஸ்லீம் பிரதேசங்களுக்கு வந்ததும் "எங்கள் அரசாங்கத்தின்கீழ் நீங்கள் ஐந்துவேளை தொழுவதை நிறுத்துவதாக" கூறுகிறார்கள். வர்த்தகம் செய்ய இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள். தாடி வளர்க்க இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள்.
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
இவ்வாறான குறைகூறல்கள், பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஹக்கீம் அதைப்போன்ற ஒரு கதையைக் கூறினார். "முஸ்லீம் தாய்மார்களின் கருப்பையிலிருந்து பயங்கரவாதம் உருவாகியது" என நான் கூறினோமாம். சதாகாலமும் இனவாதம் என்கின்ற கருப்பையிலேயே வன்முறை உருவாகிறது என நான் கூறுகிறேன். சிங்கள இனவாதம் என்கின்ற கருப்பையில் வன்முறை தோன்றுகிறது. முஸ்லீம் இனவாதம் என்கின்ற கருப்பையில் முஸ்லீம் வன்முறை தோன்றுகிறது. தமிழ் இனவாதம் என்கின்ற கருப்பையில் தமிழ் வன்முறை உருவாகிறது. நான் இவ்வாறு கூறும்போது முஸ்லீம் தாய்மார்களின் கருப்பையில் பயங்கரவாதம் தோன்றியதாக நான் கூறினேன் என ஹக்கீம் கூறுகிறார். நான் சிங்களத்தில் கூறியது ஹக்கீமிற்கு விளங்கவில்லையா என்று தெரியாது. எனவே நான் கூறிய கூற்றினை சரியாக கூறும்படி நான் கூறினேன். அவ்வாறு கூறாவிட்டால் வழக்குப் போடுவேன் என. சரிசெய்யவில்லை என்பதால் வழக்குப்போட்டேன். எமது நாட்டு அரசியல் மேடைகளில் இனிமேலும் இனவாத கோஷங்களை எழுப்ப இடமளிக்கக்கூடாது. தேசிய மக்கள் சக்தியின் மேடையிலும் வேறு எந்த இடத்திலும் இனவாதக் கூற்றுகளை விடுக்க எமது அரசாங்கம் இடமளிக்க மாட்டாது. அவ்விதமாக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
நீங்கள் திருட்டுகளுக்கு எதிரானவர்கள் என்றால் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கவேண்டும்.
அதைப்போலவே திருட்டுகளை நிறுத்தி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். திருட்டினை நிறுத்தினால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய வீதிகளை அமைக்கலாம். கடந்த காலத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்ஜெக்ஷன் எனக்கூறி எமது நாட்டுக்குகொண்டுவந்த தண்ணீரை நோயாளிகளுக்கு ஏற்றினார்கள். இவ்வாறான திருட்டு, ஊழல், விரயத்தை தடுத்துநிறுத்துகின்ற அரசாங்கமொன்றை அமைத்திடவேண்டும். சஜித்தால் அவ்வாறான அரசாங்கமொன்றை அமைக்க முடியுமா? திருட்டுகளை நிறுத்துவதற்காக சஜித்திற்கு புள்ளடியிடுவதில் பலனில்லை. ரணிலுக்கு புள்ளிடியிடுவதாலும் பலனில்லை. இவ்வளவு திருடியிருக்கும்போது வாக்குகளை அளித்தால் அவர்கள் திருடினால் பரவாயில்லை என்று நினைப்பார்கள். எனவே நீங்கள் திருட்டுகளுக்கு எதிரானவர்கள் என்றால் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கவேண்டும்.
.
உங்களால் திருட்டினை நிறுத்தமுடியாமல் திருடுகின்ற ஒருவருக்கு வாக்குகளை அளித்தால் அது ஹராம்.
திருட்டுகளை நிறுத்திவிடுவது மாத்திரம் போதுமானதாக அமையமாட்டாது. திருடியவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும். திருடர்களை பிடித்து கோல்பேஸ் மைதானத்திற்கு கொண்டுவந்து தோலை உரிப்பதாக 1994 இல் சந்திரிக்கா கூறினார். விஜேபால மெண்டிஸ் அரசாங்கத்தின் தென்னந்தோட்டங்களை கள்ளத்தனமாக எழுதிக்கொண்டமைக்காக தண்டனை வழங்குவதாகக் கூறினார். இரண்டு மூன்று வருடங்கள் கழிந்ததும் அவருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார். 2015 இல் எயார்போர்ட்டை மூடுவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். மூன்று வருடங்கள் கழியும்போது மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷவிற்கு சட்டவிரோதமாக பிரதமர் பதவியைக் கொடுத்தார். மத்திய வங்கியை உடைத்த ரணில் விக்கிரமசிங்கவை சிறையில் அடைப்பதாக 2019 இல் கோட்டாபயவின் மேடையில் கூறினார்கள். அதற்காக நீங்கள் புள்ளடியிட்டாலும் இரண்டு மூன்று வருடங்களாகும்போது ஜனாதிபதி பதவியைக் கொடுத்தார்கள். அதனால் கள்வர்களைத் தண்டிப்பதற்கான அரசாங்மொன்றை அமைக்கவேண்டும். அதற்காக ரணிலுக்கு சஜித்திற்கு வாக்களிப்பதில் பயனில்லை. உங்களின் மார்க்கத்தின்படி உங்களால் திருட்டினை நிறுத்த முடியாவிட்டால் அதனை செய்யக்கூடிய ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தில் இருந்த ஒரு முஸ்லீம் அமைச்சர்தான் என்னிடம் அவ்வாறு கூறினார். அவர் அமைச்சரவையில் இருந்தவேளையில் ஒருசில அமைச்சரவைப் பத்திரங்களை என்னிடம் கொடுத்தார். "தோழரே என்னால் திருட்டுகளை நிறுத்தமுடியாது. அதனால் நிறுத்தக்கடிய ஒருவருக்கு உதவி பரிய வேண்டுமென எங்களுடைய மார்க்கம் போதித்துள்ளது. அதனால் இந்த பத்திரங்களை நான் உங்களிடம் கொடுக்கிறேன்" என்று கூறினார். உங்களால் திருட்டினை நிறுத்தமுடியாமல் திருடுகின்ற ஒருவருக்கு வாக்குகளை அளித்தால் அது ஹராம். அப்படியானால் திருட்டுகளை நிறுத்துவதற்காக தேசிய மக்கள் மக்கள் சக்திக்கு வாக்குகளை அளிக்கவேண்டும். அதுதான் ஹலால். உங்கள் மார்க்கத்தின்படி பார்த்தாலும் இத்தடவை தேசிய மக்கள் சக்திக்கே புள்ளடியிட வேண்டும். திருட்டுகளை நிறுத்துவது மாத்திரமல்ல, திருடியவர்களுக்கு தண்டனை வழங்குவது மாத்திரமல்ல, திருடிய சொத்துக்களையும் பறிமுதல் செய்வோம்.
நானோ எமது உயர்பீடத்தில் இருப்பவர்களோ தொழில்முயற்சிகளில் ஈடுபடப்போவதில்லை
நாங்கள் வாக்குகளைக் கோருவது அதற்காகவே. அதுமாத்திரம் போதுமானதாக அமையமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தையும் சீராக்க வேண்டும். நானோ எமது உயர்பீடத்தில் இருப்பவர்களோ தொழில்முயற்சிகளில் ஈடுபடப்போவதில்லை. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பார் லயிஷன் கொடுக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அவரது சகாக்களுக்கும் சஜித்தை சேர்ந்தவர்களுக்கும் பார் லயிஷன் பகிர்ந்தளித்தார். அதைப்போலவே பெற்றோல் ஷெட் பகிர்ந்தளித்தார். இரத்தினபுரியில் இரத்தினக்கல் சுரங்கங்களை அகழ்பவர்கள் அரசியல்வாதிகளே. மணல் பேர்மிற் வாங்குபவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களே. கிழக்கின் கடற்கரைப் பரப்பில் ஹோட்டல் அமைப்பவர்களும், கற்குழிகளை பேணிவருபவர்களும் அரசியல்வாதிகளே. நாங்கள் அவற்றைப் புரிவதற்காக வரப்போவதில்லை. இந்த நாட்டில் தொழில்முயற்சிகளில் ஈடுபடவேண்டியவர்கள் நீங்களே. அவற்றை முன்னேற்றுவதற்கான உதவிகளை செய்வதையே எமது அரசாங்கம் செய்யும். உங்களுக்கு சுற்றுலா ஹோட்டலை அமைக்க வேண்டுமானால் காணியை அரசாங்கம் வழங்கும். எமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர்கூட வேண்டாம். ஆனால் உரிய காலத்தில் ஹோட்டலை நிர்மாணிக்காவிட்டால், அதனை கையகப்படுத்தி இயலுமான ஒருவரிம் கையளிப்போம். அது நல்லதல்லவா? இந்த நாட்டில் மாத்திரம் பிஸ்னஸ் செய்தால் போதாது. உலகச் சந்தைக்கும் எமது தொழில்முயற்சிகளை கொண்டுசெல்ல வேண்டும். அவ்விதமாக கைத்தொழில்களையும் தொழில்முயற்சிகளயும் விருத்திசெய்து அரசாங்கம் வரி அறவிடும். அவ்விதமாக அறவிட்ட வரித்தொகைககள் எவ்வாறு ஈடுபடுத்தப்பட்டன என்பதை பற்றிய செய்தியை போஃனுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக அறிவிக்கின்ற சிஷ்ஸ்டமொன்றை ஒரிரு வருடங்களில் கட்டியழுப்புவோம். கல்விக்காக, சுகாதாரத்திற்காக, பாதுகாப்பிற்காக, வீதிகளை அமைப்பதற்காக ஈடுபடுத்திய விதத்தை விபரங்களுடன் முன்வைப்போம். தேசிய ஒற்றுமையை உருவாக்குகின்ற, திருட்டுகளை நிறுத்துகின்ற, வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றுகின்ற அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான தொடக்கத் திகதி அடுத்த 21 ஆந் திகதியாகும்.
ஊரிலுள்ள வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கு புள்ளியிட்ட வாக்குளால் நிரப்பவேண்டியது நீங்கள்தான்
நீங்கள் 21 அந் திகதி தெரிவு செய்வது புதிய அரசாங்கத்தையா? பழைய பாதையிலேயே போகப்போகிறீர்களா? எம்மால் விடயங்களை தெளிவுபடுத்த மாத்திரமே முடியும். எனினும் ஊரிலுள்ள வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கு புள்ளியிட்ட வாக்குளால் நிரப்பவேண்டியது நீங்கள்தான். பழைய முஸ்லீம் கட்சிகள் பதற்றமடைந்துள்ளன. பெருமளவிலான இளம் முஸ்லீம் சமுதாயத்தினர் தேசிய மக்கள் சக்தியின் பெருவெற்றிக்காக செயலாற்றுவதால் அவர்கள் கலவரமடைந்திருக்கிறார்கள். இந்த மேடை இந்த புதிய இளைஞர்களால் நிரம்பியுள்ளது. அவர்கள் ஊருக்குப்போய் முதியர்களுடன் பேசுவார்கள். முகநூலில் எழுதுவார்கள், முச்சக்கரவண்டியை ஓட்டும்போது பேசுவார்கள். கடைக்கு வந்தால் பேசுவார்கள். அதனால் அந்த வாய்ப்பினை கைநழுவ விடவேண்டாம். நாட்டை வறுமையாக்கிய திருடர்களை விரட்டியடிக்க உகந்த தருணம் இதுவே. நாட்டை வளமாக்குகின்ற அரசாங்கமொன்றை அமைக்ககூடிய தருணம் இதுவே. அதோ அதற்காக எல்லோருடனும் பேசுங்கள். 21 ஆந் திகதி கிண்ணியா பிரதேசத்தின் வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கான வாக்குகளால் நிரப்புவோம்.
Post a Comment