அல்லாஹு அக்பர் - என்னுடன் அல்லாஹ் இருக்கிறான்...
இன்று சனிக்கிழமை (3) ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லூகாவை அல்ஜீரியாவைச் சேர்ந்த இமேம் கெலிஃப் குத்துச் சண்டைப் போட்டியில் வீழ்த்தியுள்ளார்.
இந்த வெற்றிக்குப் பிறகு இமேம் கெலிஃப் கூறுகையில்,
'சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தில் நான் பல ஆண்டுகளாக குத்துச்சண்டை விளையாடி வருகிறேன், இது எனக்கு அநீதி இழைத்தது.
ஆனால் என்னுடன் அல்லாஹ் இருக்கிறான் அல்லாஹு அக்பர்'
இமானை ஒரு ஆண் என்று அழைத்த ஹங்கேரிய வீரங்களையான லூகாவை இமேம் கெலிஃப் வென்றாள்
இமேம் கெலிஃப்: இப்போது அரையிறுதியில் இருக்கிறாள்!
தங்கப் பதக்கம் வரும் என்று நம்புவோம்.
பிறக்கும்போதே பெண்ணாக பிறந்த இவரது அல்ஜீரிய கடவுச்சீட்டில் பெண்ணாகப் பதிவுசெய்யப்பட்டே உள்ளார். பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கு முன்னதாகப் பதிவு செய்யப்பட்ட நேர்காணலில், 'இமானே கெலிஃப் என்ன ஒரு துணிச்சலான பெண் என்பதை உலகம் முழுவதும் காட்ட விரும்புவதாக கூறியிருந்தார்.
எனினும் அவரது பாலினம் தொடர்பில், உலகளாவிய ரீதியில் சர்ச்சை வெடித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment