Header Ads



பெண் ஒருவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்



கொழும்பில் கார் மற்றும் 875,000 ஸ்டெர்லிங் பவுண்ட் பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக பெண் ஒருவரின் கையடக்கபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி 45 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை அம்பலமாகி உள்ளது.


மோசடி செய்தமை தொடர்பில் நபர் ஒருவர் கைது செயப்பட்ட நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியை சேர்ந்த சுமித் பெர்னாண்டோ என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.



மாகொல பகுதியை சேர்ந்த மனோஹரி பிரியங்கரி என்ற பெண் செய்த முறைப்பாடுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.



முறைப்பாட்டாளரான பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு பரிசு கிடைத்ததாக குறுந்தகவல் வந்ததாக களனிப் பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் குமார நீதிமன்றில் தெரிவித்தார்.


சுங்க அதிகாரி என தன்னை அடையாளப்படுத்திய சந்தேக நபர், சுங்கத்தில் இருந்து காரை வெளியே கொண்டு வருவதற்காக பணம் தேவை என பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.



அதற்கமைய, அந்த பெண் குறித்த தொகையை வங்கியில் வைப்பு செய்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குற்றச்சாட்டுக்களை பரிசீலித்த மஹர இலக்கம் 02 நீதவான் ஜனித பெரேரா சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.