Header Ads



பிரமிட் திட்டத்தில் வருமானமீட்டிய, அரசாங்க வைத்தியர் கைது


பிரமிட் திட்டமொன்றின் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு 18 கோடி ரூபா பெறுமதியான சொத்து கொள்வனவு செய்த வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.


ஒன்மெக்ஸ் டி.ரீ என்ற பிரமிட் கொடுக்கல் வாங்கல் திட்டத்தின் ஊடாக குறித்த மருத்துவர் பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


ஒன்மெக்ஸ் மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரும், நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான சம்பத் சந்தருவான் என்பவரின் பெயருக்கு இந்த வைத்தியரின் சொத்து ஒரே நாளில் கைமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


18 கோடி ரூபா பெறுமதியான இந்த சொத்து பிரமிட் வர்த்தகம் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த வைத்தியரின் சொத்துக்களை கைமாற்றுவதற்கு தடை விதிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.


இருப்பினும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் காரணத்தினால் சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.


சந்தேகநபரான வைத்தியர் சொத்துக்களை கைமாற்றுவதற்கு தடை விதித்த நீதிமன்றம், 15 கோடி ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் அடிப்படையில் வைத்தியருக்கு பிணை வழங்கியுள்ளது. 

No comments

Powered by Blogger.