Header Ads



இம்முறை ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல், துடுப்பு இல்லாத படகு போன்றது


ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்தார்.


கொழும்பில் வியாழக்கிழமை (15)  இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருத்துரைத்த போதே இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 


பாராளுமன்றத்தில் கூட பெண்களுக்கு உரிய இடமும் சமமான இடமும் வழங்கப்பட வேண்டும் என கட்சித் தலைவர்கள் பெருமையுடன் கூறினாலும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


ஒரு நாட்டில் பெண் உரிமைகள் தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்களும் அதிக அக்கறை காட்ட வேண்டும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இம்முறை பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.