Header Ads



லெபனானுக்கு செல்ல வேண்டாம்


அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலையின் காரணமாக மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்து வருவதால்  அத்தியாவசிய வேலைகள் தவிர வேறு எதற்காகவும் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.


மேலும், மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.


லெபனானில் சுமார் 6,000 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.